TA/770301 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, நம்முடைய இந்த இயக்கம் நடைமுறைச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. உங்களிடம் என்ன திறமை இருக்கிறதோ, என்ன சிறிய பலம் இருக்கிறதோ, என்ன கல்வி இருக்கிறதோ... நீங்கள் எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. உங்களிடம் எது இருக்கிறதோ, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்த நிலையில் இருந்து கொண்டே கிருஷ்ணருக்குச் சேவை செய்யலாம். முதலில் எதையாவது கற்றுக்கொண்டு, பிறகு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. இல்லை. சேவையே கற்றல்தான். நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சேவை செய்ய முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அனுபவம் வாய்ந்த சேவகராக நீங்கள் முன்னேறுவீர்கள். நமக்குக் கூடுதல் புத்திசாலித்தனம் எதுவும் தேவையில்லை."
770301 - சொற்பொழிவு SB 07.09.09 - மாயாப்பூர்