TA/760620b - ஶ்ரீல பிரபுபாதர் டொராண்டோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "மனித வாழ்க்கை விஷ்ணு-ஆராதனத்திற்காகவே படைக்கப்பட்டது. அதற்காகவே வர்ணாஸ்ரம தர்மங்கள்: பிராமணர், க்ஷத்ரியர், வைஷ்யர், சூத்ரர். இதன் முக்கிய நோக்கம் விஷ்ணு-ஆராதனம் (திருமால் வழிபாடு).i 'விஷ்ணு-ஆராதனம் பரம்' (திருமால் வழிபாடே சிறந்தது).
சில நன்மைகளைப் பெறுவதற்காக நாம் பலரையும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் யாரையாவது புகழ்ந்தே ஆக வேண்டியுள்ளது. ஒரு வியாபாரி தனது வாடிக்கையாளரை முகஸ்துதி செய்ய வேண்டும்; ஒரு வேலையாள் தனது எஜமானரை முகஸ்துதி செய்ய வேண்டும்; மற்றும் இதுபோல, சில உதவிக்காக நண்பரையோ, அமைச்சரையோ புகழ்ந்துரைக்கிறோம். ஆனால், சிவபெருமான் கூறுகிறார், "ஏன் நீங்கள் விஷ்ணுவை முகஸ்துதி (புகழ்ந்து வழிபட) செய்யக்கூடாது?" என்று. விஷ்ணு-ஆராதனம் பரம். ததீயானாம் ஆராதனம் (விஷ்ணுவின் பக்தர்களை வழிபடுதல்). இதுவே சாஸ்திரங்களின் கட்டளை." |
| 760620 - சொற்பொழிவு SB 07.06.04 - டொராண்டோ |