| "முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கே பாலியல் வாழ்க்கை மிக உயர்ந்த இன்பமாக கருதப்படுகிறது, ஆனால் ஆன்மீக உலகில் பாலியல் இல்லை. பிறகு அந்த இன்பம் என்ன? அந்த இன்பம் தான் இந்த ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜபிப்பதும் ஆடுவதும் ஆகும். அது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இந்த ஜபம் மற்றும் நடனத்தில் மிகவும் மூழ்கியிருப்பதால், அவர்களுக்கு பாலியலில் ஆர்வம் இல்லை. அதுதான் ஒரே வழி. பாலியல் இன்பத்தை நிறுத்த விரும்பினால், இந்த இன்பத்தை, இந்த அதீத ஆன்மீக இன்பத்தை நீங்கள் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்."
|