| "கிருஷ்ணருக்கு நம்முடைய சேவை தேவையில்லை, ஆனால் நாம் கிருஷ்ணருக்குச் சேவை செய்தால், அது நமக்குத்தான் நன்மை. இதுவே இதற்கான சூத்திரம். கிருஷ்ணர் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். ஆனால் அவர் கடமைப்பட்டதாக உணர்கிறார். ஏன்? அவிதுஷஃ. நாம் அனைவரும் முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் இருக்கிறோம். நாம் ஏதோ சேவை செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை. நம்மால் எதுவும் கொடுக்க முடியாது. நாம் மிகவும் அற்பமானவர்கள். அவர் எல்லையற்றவர், நாம் மிகவும் சிறியவர்கள். ஆனால், ஒரு சிறு குழந்தை தன் தந்தைக்கு எதையாவது கொடுப்பதைப் போல... அது தந்தையின் சொத்துதான், ஆனாலும் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைவார். 'இந்தக் குழந்தை எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறது' என்று நினைத்து, 'இதுதான் எனது மிகப்பெரிய சொத்து' என்று எண்ணுகிறார் (சிரிப்பு)."
|