TA/751019 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வாழ்க்கையின் உண்மையான பிரச்சினைகளை நாம் முற்றிலும் மறந்துவிடுகிறபோது, அதுவே மிருகத்தன்மை ஆகும். எனவே, மனித சமூகத்தில் மிருகத்தன்மை மேலோங்கி, வெறுமனே விலங்குகளைப் போல வாழும்போது, அது தர்மஸ்ய க்லானி என்று அழைக்கப்படுகிறது—அதாவது 'தர்மத்தின் குறைபாடு.'ஆகையால்தான், மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு மத அமைப்பு உள்ளது. அது எந்த மயமாக இருந்தாலும்—இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் அல்லது பௌத்தம்—நாகரிகமான மனித சமூகத்தில் ஆன்மீக அல்லது மதக் கொள்கை பற்றிய ஒரு கருத்து இருக்கவே செய்கிறது. மதக் கொள்கை இல்லாமல் நாம் பூனைகளும் நாய்களுமாகவே இருக்கிறோம்; ஏனெனில் பூனை மற்றும் நாய் சமூகத்தில் தேவாலயம், மசூதி, கோவில் அல்லது ஜெப ஆலயம் போன்ற எந்தவொரு விஷயமும் இல்லை. அவை வெறும் நிர்வாணமாக வாழ்ந்துவிட்டு குரைக்கின்றன, அவ்வளவுதான். எனவே, நாம் வெறுமனே வாழ்ந்துவிட்டு பூனை, நாய்களைப் போல நிர்வாணமாக இருந்து குரைக்க முயற்சித்தால், நமக்கும் அவைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?"
751019 - சொற்பொழிவு BG 04.13 - ஜோகன்னஸ்பேர்க்