TA/751018 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஏற்கனவே மாயையின் தாக்கத்தில் இருக்கிறோம். பிரகிருதிம் மோஹினீம் ஷ்ரிதஹ். இந்த பௌதிக உலகத்தை நாம் மிகவும் வசீகரமானதாக, மிகவும் கவர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டுள்ளோம். நாம் இங்கேயே தங்கி அனுபவிக்க விரும்புகிறோம். இதுவே பௌதிக வாழ்க்கை ஆகும். பௌதிக உலகத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒவ்வொருவரும், பாவிகள் அல்லது வீழ்ச்சியடைந்தவர்கள் ஆவர். கிருஷ்ண-பூலியா-ஜீவ போக வாஞ்சா கரே (பிரேம-விவர்த்த). நம்முடைய பௌதிக வாழ்க்கை தொடங்குகிறது . . . நாம் ஆன்மாக்கள். நம்முடைய பௌதிக வாழ்க்கை எப்போது . . .? நாம் கிருஷ்ணரை நிராகரிக்க முயலும் போது, அவருக்கு சேவை செய்யாமல் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் போது, அது பௌதிக வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் இல்லாமல், கடவுள் இல்லாமல், நாம் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். அது பௌதிக வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
751018 - சொற்பொழிவு BG 16.06 - ஜோகன்னஸ்பேர்க்