| "வேத கலாச்சாரத்தின்படி, ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பெண்ணை ஒரு தடையாக ஏற்றுக்கொள்கிறார்கள். முழு அடிப்படை நாகரிகமும் பெண்ணை... எப்படித் தவிர்ப்பது என்பதுதான். பெண்ணை மட்டுமே பெண் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஆணும் பெண்தான். பெண்ணை மட்டுமே இழிவுபடுத்துகிறார்கள், ஆண் இழிவுபடுத்தப்படுவதில்லை என்று நினைக்க வேண்டாம். பெண் என்றால் 'அனுபவிக்கப்படுபவர்', ஆண் என்றால் 'அனுபவிப்பவர்'. எனவே இந்த உணர்வு, இந்த உணர்வே கண்டிக்கத்தக்கது. நான் ஒரு பெண்ணை இன்பத்திற்காகப் பார்த்தால், நான் ஆணாகிறேன். ஒரு பெண் மற்றொரு ஆணை இன்பத்திற்காகப் பார்த்தால், அவளும் ஆணாகிறாள். பெண் என்றால் அனுபவிக்கப்படுபவள், ஆண் என்றால் அனுபவிப்பவர். எனவே, யார் அனுபவிக்கும் உணர்வைக் கொண்டுள்ளாரோ, அவர் 'ஆண்' என்று கருதப்படுகிறார். எனவே, இங்கு இரு பாலினருமே... 'எப்படி நான் அனுபவிப்பது?' என்றுதான் திட்டமிடுகிறார்கள். எனவே, அவன் செயற்கையாக புருஷனாக (ஆணாக) இருக்கிறான். இல்லையெனில், உண்மையில், நாம் அனைவரும் இயற்கை, ஜீவன் ஆவோம் ஆணோ பெண்ணோ இது வெளிப்புறமான உடைகளே."
|