TA/750807 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டொராண்டோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் வாசுதேவனின் பக்தித் தொண்டில் ஈடுபட்டால், அவர் உடனடியாக வைராக்கியத்தையும் (பௌதிகப் பொருட்களின் மீதான பற்றுதல் இல்லாமை) மற்றும் ஞானத்தையும் பெறுகிறார். ஆனால் இந்த முட்டாள்களில் பெரும்பாலோர் பக்தர்களாக இல்லாதவர்கள். ‘மஹாந்தா’ என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உண்மையில் மஹாந்தா கிடையாது—அவர்கள் ‘மோஹாந்தா’ (பொருள் மயக்கத்தால் முற்றிலும் குருடானவர்கள்). அதுதான் இங்குள்ள சிக்கல். கிருஷ்ண உணர்வு இயக்கம் என்பது அனைவரையும் வாசுதேவனுக்குச் செய்யும் பக்தித் தொண்டு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவே ஆகும். அப்பொழுதுதான் எல்லாம் சரியாக அமையும். மற்ற எந்த தளமும் ஒருபோதும் வெற்றியைத் தராது. அவை வெறும் வெளிப்பகட்டே தவிர, உண்மை கிடையாது."
750807 - காலை உலா - டொராண்டோ