| "ஒவ்வொருவரும் தங்கள் உண்மையான கடமையை மறந்துவிட்டார்கள். "நான் நித்தியமானவன். நான் இந்தத் தற்காலிக உடலைப் பெற்று, பிறப்பு, இறப்பு, மற்றும் முதுமை ஆகிய இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டிருக்கிறேன். எனவே, என் உண்மையான பிரச்சனை எப்படி மீண்டும் நித்தியமாகி, பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றை ஏற்காமல் இருப்பது என்பதுதான். அதுவே எனது உண்மையான கடமை" என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். ஆனால், நாம் இயற்கையின் ஜட குணங்களால் பாதிக்கப்பட்டிருப்பதால், வெவ்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு திட்டங்களைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். தங்கள் உண்மையான கடமையை மறந்துவிடுகிறார்கள். இதற்கு 'மாயா' என்று பெயர். மாயா என்றால்... 'மா' என்றால் 'இல்லை'; 'யா' என்றால் 'இது'. எனவே, 'இது என்னுடைய உண்மையான செயல் அல்ல' என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அதுவே மாயை ஆகும்."
|