TA/750728 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் டியாகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை. (சிரித்துக்கொண்டு) பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் காளிதாச கவியின் குமாரசம்பவ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 'தோய-நிதிம் அவகாஹ்ய ஸ்திதஃ ப்ருதிவ்யாம் இவ மான-தண்டஃ'. அவை அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல். இந்த மூர்க்கர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அதனால், 'முதலில் வந்த மனிதன்' என்று சொல்கிறார்கள், இவனுக்கு முன் மனிதனே இல்லாதது போல. பார்த்தீர்களா. (சிரித்துக்கொண்டு) 'மனிதன் இல்லை. நாகரிகம் இல்லை' என்பது இந்த துஷ்டர்களின் பதிப்பு."
750728 - காலை உலா - சான் டியாகோ