| "எனவே, இந்த அஜாமிளன் தனது முட்டாள்தனத்தால் மகனின் பௌதிக உடலின் மீது பற்றுதல் கொண்டிருந்த போதிலும், அவன் "நாராயணா" என்று உச்சரித்துக் கொண்டிருந்ததால், கிருஷ்ணர் அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டார், அவ்வளவுதான், அதாவது "ஏதோ ஒரு வழியில் அவன் உச்சரிக்கிறான்." திருநாமத்தை உச்சரிப்பதன் முக்கியத்துவம் அவ்வளவு அற்புதமானது. எனவே உச்சரிப்பதைக் கைவிடாதீர்கள். அப்பொழுது கிருஷ்ணர் உங்களைப் பாதுகாப்பார். இதற்கு இதுவே உதாரணம். "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண," என்று நீங்கள் பயிற்சி செய்யுங்கள். இயல்பாகவே, நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது, "ஹரே கிருஷ்ண" என்று சொல்வீர்கள். இந்தளவாவது செய்யுங்கள். ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்க நீங்கள் பழகிவிட்டால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.எனவே இது கடினம் அல்ல. உண்மையோடு உச்சரியுங்கள். குற்றங்களைத் தவிர்க்க முயலுங்கள். புலனின்பத்திற்காக வேண்டுமென்றே கீழே வீழ்ந்துவிட முயலாதீர்கள். அது மிகவும் ஆபத்தானது. அவன்... வேண்டுமென்றே கீழே வீழவில்லை. சூழ்நிலை காரணமாக ஒரு விலைமாதின் தொடர்பிற்கு வர நேரிட்டது, அவனால் அதைத் தவிர்க்க முடியவில்லை."
|