| "எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் அவர்களுக்கு உண்மையான இன்பத்தைப் பற்றி யோசனை கொடுப்பதாகும். ... எனவே உண்மையான இன்பம் என்றால், அதாவது நீங்கள் இந்த ஜட உடலில் மாசுபடாமல் இருப்பது. ஆன்மீக இன்பம். இப்போது நாம் இந்த உடலுடன் இன்பம் பெற முயற்சி செய்கிறோம். இந்த உடல் உணர்வாகும். இந்த்ரியாணி பராண்ய் ஆஹு꞉. உடல் இன்பம் என்றால் புலன்களின் இன்பம். இந்த்ரியாணி பராண்ய் ஆஹுர் இந்த்ரியேப்ய꞉ பரம்ʼ மன꞉, மனஸஸ் து பரா புத்தி꞉ (BG 3.42). இவ்வழியால் உடல் பொய்யானது என்பதை நாம் புரிந்ததுக் கொள்ள வேண்டும்; ஆகையினால் உடல் இன்பமும் பொய்யானது. அது அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. இது அவர்களுடைய துரதிர்ஷ்டம். ஆகையினால் ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பத்தில் இதை புரிந்துக் கொள்ளாதார்கள் அதாவது "நான் இந்த உடல் அல்ல. நான் உடலில் இருந்து வேறுபட்டவன்..." பிறகு அவனுடைய ஆன்மீக வாழ்க்கை ஆரம்பமாகிறது. இல்லையென்றால், பூனை மேலும் நாயும் மற்றும் அனைவரும் இந்த உடல் இன்பத்தில் ஈடுபடுகிறார்கள்."
|