TA/750709c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: பெண்களின் நிலை ஆண்களுக்கு கீழ்நிலையாகும். எனவே ஆண்கள் முதல் நிலை என்றால், பெண்களும் முதல் நிலை. ஆண்கள் இரண்டாம் நிலை என்றால், பெண்களும் இரண்டாம் நிலை. ஆண்கள் மூன்றாம் நிலை என்றால், பெண்களும் மூன்றாம் நிலை. இப்படியாக... ஏனென்றால் பெண்கள், ஆண்களுக்கு உதவி செய்வதற்காக ஆனவர்கள், எனவே பெண்கள், ஆண்கள், அல்லது கனவனுக்கு பொருத்தமானவர்களாகிறார்கள்.

பெண் நிருபர்: நீங்கள், பெண்கள் ஆண்களுக்கு தாழ்வானவர்கள் என்று கூறுகிறீர்களா?

பிரபுபாதர்: ஆம்

பெண் நிருபர்: ஏன்?

பிரபுபாதர்: உடலியல் நிலைபடி. சும்மா உங்களைப் போல்... உங்கள் உடல் அம்சங்கள், ஆண்களின் உடல் அம்சங்களில் இருந்து வேறுபட்டது. இதை நீங்கள் மறுக்க முடியாது. எனவே உடல் அம்சங்களுக்கு ஏற்ப, உடலியல் நிலைபடி மேலும் அனைத்தும் அங்கு உள்ளது. நீங்கள் எவ்வாறு மறுக்க முடியும்?

பெண் நிருபர்: நான் உங்களுக்கு தாழ்வானவள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிரபுபாதர்: இது தாழ்ந்த அல்லது உயர்ந்த என்ற கேள்விக்கு இடமில்லை. வித்தியாசம். இப்போது நீங்கள் ஒரு தாழ்ந்த அல்லது உயர்ந்த நிலை எடுத்துக் கொள்ளுகிறீர்கள். அதுதான் உங்கள் கணக்கீடு. ஆனால் உடல் அம்சங்கள் வித்தியாசமானது. அதுதான் பௌதிகம். ஆனால் ஆன்மீகப்படி அவை அனைத்தும் ஒன்றே."

750709 - Interview, TV - சிக்காகோ