TA/750708b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| பிரபுபாதர்: எத்தகைய திறனிலும் நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்யலாம்—அத்துடன் நீங்கள் சேவை செய்ய விரும்ப வேண்டும். மேலும் நீங்கள் கிருஷ்ணரை உங்கள் சேவைக்கு ஈடுபடுத்த விரும்பினால், அது தவறாகும். பிறகு அது தவறாகும். கிருஷ்ணரை உங்கள் சேவைக்கு ஈடுபடுத்த கூடாது. அனைவரும் கிருஷ்ணரை அவர்களுடைய சேவைக்கு ஈடுபடுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள், "ஓ கிருஷ்ணா, எங்களுக்கு தினமும் உணவு அளியுங்கள்," அதாவது "நீங்கள் எனக்கு சேவை செய்யுங்கள். எங்களுக்கு தினமும் உணவு அளித்து மேலும் எங்களுக்கு சேவை செய்யுங்கள்." மேலும் நம் முன்மொழிவு, யஶோதாமயீ ஆகும், "கிருஷ்ணா, நீ நாள் முழுவதும் விளையாடிக் கொண்டிருக்கிறாய். இங்கே வா! முதலில் உணவை எடுத்துக் கொள்." இது சேவை. அவர்கள் கிருஷ்ணரிடம் தினமும் உணவு கொடுக்க வேண்டிக் கொள்ள செல்கிறார்கள். ஆனால் இங்கே யஶோதாமயீ கட்டளையிடுகிறார்கள், "இங்கே வா! நீ சாப்பிடவில்லை என்றால், நீ ஒல்லியாகவும் மெலிந்தும் போவாய். இங்கே வா." இதுதான் வைஷ்ணவ தத்துவம்.
பக்தர்: ஜெய, ஜெய, ஸ்ரீலா பிரபுபாதர் பிரபுபாதர்: ஹரே கிருஷ்ணா |
| 750708 - காலை உலா - சிக்காகோ |