TA/750708 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நீங்கள் பரம உண்மையை புரிந்துக் கொள்ள ஊகிக்க கூடாது. அது சாத்தியமில்லை. ஆகையினால் ப்ரஹ்மா பரிந்துரைக்கிறார் அதாவது ஒருவர் முட்டாள்தனமான நடைமுறைகளை விட்டுவிட வேண்டும். அது முட்டாள்தனமான விஷயம் அல்ல, ஆனால் தற்சமையம் அதனால் பயனில்லை. இறையியலாளர் என்று அழைக்கப்படுபவர் மேலும் இறையியலாளர் அல்லது தத்துவ ஞானி, அவர்களுக்கு தெரியாது—ஊக வணிகர்கள். எனவே இத்தகைய பயிற்சி, ஜ்ஞானே ப்ரயாஸம் அறிவுக்கு முயற்சி செய்கிறார்கள், உதபாஸ்ய, இதை விட்டுவிடுங்கள். ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய.
பிறகு என்ன தேவைப்படுகிறது? நமந்த ஏவ. சும்மா அடிபணியுங்கள். நீங்கள் ஒரு பெரிய தத்துவ ஞானி, இறையியலாளர், விஞ்ஞானி என்று உங்களைப்பற்றி நினைக்காதீர்கள். சும்மா அடக்கமாக இருங்கள். "என் அன்பான ஐயா, சும்மா அடக்கமாக இருங்கள்." நமந்த ஏவ. "பிறகு என் வேலை என்னவாக இருக்கும்? சரி, நான் அடக்கமாக இருக்கிறேன். பிறகு நான் எவ்வாறு முன்னேற்றம் அடைவது?" இப்போது, நமந்த ஏவ ஸன்-முகரிதாம்ʼ பவதீய-வார்தாம். சும்மா பகவானின் செய்தியை கேளுங்கள்." "யாரிடமிருந்து?" ஸன்-முகரிதாம்: "பக்தர்களின் வாய்மூலமாக."" |
| 750708 - சொற்பொழிவு SB 06.01.24 - சிக்காகோ |