TA/750707 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே நமக்கு உணர்வு வேண்டும் அதாவது "நாம் ஸாஸ்திரத்திலிருந்து கேட்கிறோம் அதாவது நாம் நித்தியமானவர்கள் என்று. நாம் ஏன் இந்த இயற்கையின் சட்டத்திற்கு, காலாவிற்கு அடிபணிகிறோம்? நான் இறக்க விரும்பவில்லை, நான் துன்பப்பட விரும்பவில்லை, நான் முதியவராக விரும்பவில்லை, நான் நோய்வாய்பட விரும்பவில்லை, மேலும் இந்த நான்கு விஷயங்களும் என் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இருப்பினும், நான் மிகவும் முட்டாள், நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான் சுதந்திரமானவன் என்று." சும்மா பாருங்கள். இதைத்தான் முட்டாள்தனம், அயோக்கியதனம் என்று அழைக்கிறோம்.
எனவே நம் கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த முட்டாள்தனம், அயோக்கியதனம் இவற்றை அகற்ற முயற்சி செய்கிறது. அதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம், அதாவது "ஐயா, நீங்கள் சுதந்திரமானவன் அல்ல. நீங்கள் முழுமையாக இயற்கையின் பிடியின் கீழ் இருக்கிறீர்கள், மேலும் இறப்பிற்கு பின், உங்கள் அனைத்து சுதந்திரமும் முடிவடைந்துவிடும். நீங்கள் இயற்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பீர்கள், மேலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒரு வகையான உடல் உங்கள் மீது திணிக்கப்படும்." கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹ உபபத்தயே (SB 3.31.1). எனவே அடுத்த உடல் எவ்வாறு உருவானது? கர்மணா, உங்கள் செயல் முறைகளால். நீங்கள் உங்கள் அடுத்த உடலை உருவாக்குகிறீர்கள். உங்கள் அடுத்த உடலுக்கு நீங்கள்தான் பொறுப்பு." |
| 750707 - சொற்பொழிவு SB 06.01.23 - சிக்காகோ |