| "ஆன்மீக உலகில் இந்த உடலை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உடல் ஆன்மீகமாகும். நாம் இங்கு இந்த பௌதிக உலகிற்கு வந்ததால், இந்த உடலை பராமரிக்க நான் சாப்பிட வேண்டும், நான் தூங்க வேண்டும், நான் என் புலன்களை திருப்தி படுத்த வேண்டியுள்ளது மேலும் நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்—நான்கு இன்றியமையாத தேவைகள். ஆஹார-நித்ரா-பய-மைதுனம்ʼ ச. மேலும் ஆன்மீக உடல் என்றால் இந்த நான்கு வகை உடலின் கோரிக்கை இல்லை, இனி இல்லை. அதுதான் ஆன்மீக வாழ்க்கை. அப்படியென்றால் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, இனச்சேர்க்கை இல்லை மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதில்லை. வ்ருʼந்தாவனத்தில் இருந்த அந்த கோஸ்வாமீகள், ஆறு கோஸ்வாமீகள், அவர்கள் பயிற்சி செய்தார்கள். நித்ராஹார-விஹாரகாதி-விஜிதௌ. அவர்கள் தூக்கத்தை, சாப்பிடுவதை, இனச்சேர்க்கையை மேலும் பாதுகாத்துக் கொள்வதை வெற்றி கொண்டார்கள். நித்ரா என்றால் தூங்குவது, ஆஹார என்றால் சாப்பிடுவது, விஹார என்றால் இனச்சேர்க்கை. நித்ராஹார-விஹாரகாதி-விஜிதௌ. வெற்றி கொண்டார்கள். எனவே இதுதான் ஆன்மீக வாழ்க்கையின் முன்னேற்றம். நாம் இந்த விஷயங்களை வெற்றி கொள்ளும் போழுது, நாம் ஆன்மீக தளத்திற்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம்."
|