TA/750705d காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜட இன்பத்தில் அதிகமாக இணைப்பு இருப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதியற்றது. எனவே மேற்கத்திய உலகம் ஜட இன்பத்தில் இணைந்திருக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். ஆகையினால், ஆன்மீக வாழ்க்கையில் பின்தங்கி இருக்கிறார்கள். வேத நாகரீகம், ஜட இன்பத்தில் ஈடுபட அதிகமாக ஊக்குவிக்காது. குறைக்க வேண்டும். அதுதான் இந்திய நாகரீகம். அவர்கள், அவர்களிடம் பணம் இருந்தால், அவர்கள் அதை பெரிய கோவில் கட்ட செலவு செய்வார்கள், குடியிருப்பு வீடுகளுக்கு அல்ல. ஒருவேளை அரசனுக்கு மட்டும் ஒரு பெரிய அரண்மனை இருக்கும். சாதாரண மனிதன், அவர்கள் பெரிய அரண்மனைக்கு அக்கறை கொள்ளவில்லை. சாதாரண மனிதன், குடிசையில் வாழ மிகவும் மகிழ்ச்சி அடைவான், மேலும் காய்கறிகள், பழங்கள் வளர்க்க ஒரு சிறிய தோட்டம், ஒரு சிறிய ஏரி, அவ்வளவுதன். பல பெரிய கட்டிடங்களுக்கு நேரத்தை வீணாக்குவதில்லை, பெரிய, பெரிய ..."

750705 - காலை உலா - சிக்காகோ