TA/750705c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் மக்களை நான்காம் தர மனிதனாக வைத்திருந்தால், பிறகு அது நாகரீகத்தின் முன்னேற்றம் ஆகாது. முயற்சி எடுக்கப்பட வேண்டும், நான்காம் தர மனிதன் எவ்வாறு முதல் தர நிலைக்கு கலாச்சாரம் மற்றும் கல்வியால் உயர்த்தப்பட முடியும் என்று. ஆக இந்த அஜாமில, அவன் பெற்றோர்களால் தகுதி பெற்ற ப்ராஹ்மணனாக பயிற்சி அளிக்கப்பட்டான். அந்த தகுதி பெற்ற ப்ராஹ்மணா என்பது என்ன? நீங்கள் பல முறை கேட்டிருக்கிரீர்கள்: ஶமோ தம꞉ ஸத்யம்ʼ ஶௌசம் ஆர்ஜவம்ʼ திதிக்ஷா, ஜ்ஞானம்ʼ விஜ்ஞானம் ஆஸ்திக்யம்ʼ ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (BG 18.42). இந்த தகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். முதலில், ஶம. ஶம என்றால் மன நிலையின் சமநிலை. மனம் ஒருபோதும் தொந்தரவு செய்யப்படாது. மனம் தொந்தரவடை பல காரணங்கள் இருக்கின்றன. மனம் தொந்தரவடையாமல் இருக்கும் போது, அதை ஸம꞉ என்று அழைக்கிறோம். குருணாபி து꞉கேன ந விசால்யதே. அதுதான் யோகாவின் முழுமை."

750705 - சொற்பொழிவு SB 06.01.21 - சிக்காகோ