| "இது பகவானை மறக்கும் யுகமாகும். நாம் இதை கலி-யுகம் என்று கூறுகிறோம். கலி-யுகம் என்றால் தவறான புரிதல். மேலும் அது, நான் கூறுகிறேன், அழுக்கான விஷயங்கள் மனதில் இருப்பது. எனவே பகவான் மிகவும் சக்திவாய்ந்தர் அதாவது நாம் பகவானின் புனிதமான பெயரை உச்சாடனம் செய்தால், பிறகு நாம் சுத்திகரிக்கபடுகிறோம். எனவே எங்கள் இயக்கம் இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டது: பகவானின் புனித நாமத்தை உச்சாடனம் செய்யுங்கள். நாங்கள் அனைவருக்கும் சகல வசதிகளையும் கொடுக்கிறோம், எவ்விதமான வேறுபாடும் இல்லாமல் அதாவது, "நீங்கள் எங்களுடன் வாருங்கள். எங்கள் கோவிலுக்கு வாருங்கள், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள் மேலும் கொஞ்சம் ப்ரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், புத்துணர்ச்சி பெற்று, மேலும் படிப்படியாக நீங்கள் சுத்திகரிக்கப்படுவீர்கள்." எனவே அரசாங்க அதிகாரிகள், இந்த வேலைக்கு எங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தால், பிறகு நாங்கள் பெரிய அளவில் ஹரே கிருஷ்ணா ஸங்கீர்தனாவிற்கு ஏற்பாடு செய்து, மேலும் அவர்களுக்கு கொஞ்சம் ப்ரசாதம் கொடுத்து, பிறகு நமக்கு நிச்சயமாக தெரியும் அனைத்து இடங்களும் மாற்றம் அடையும் என்று."
|