TA/750704c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "புன꞉ புனஶ் சர்வித-சர்வணானாம் (SB 7.5.30), மெல்லப்பட்டதை மீண்டும் மெல்லுவது, அவ்வளவு தான். உங்கள் புலன்கள் குற்றம் நிறைந்ததாக இருந்தால், பிறகு நீங்கள் எதைப் பார்ப்பீர்கள்? நீங்கள் எதைப் பார்த்தாலும், அது குற்றம் நிறைந்ததாக இருக்கும். எனவே பார்ப்பதன் அர்த்தம் என்ன? ஆகையினால் நாம் பார்ப்பது ஶாஸ்த்ர-சக்ஷுஷாத் ஆகும். நாம் அங்கீகரிக்கப்பட்ட வேதத்தின் வழி பார்க்க வேண்டும். அதுதான் நம்... நீங்கள் ஶுகதேவ கோஸ்வாமீ அவர்களின் முழு பிரபஞ்சத்தை பற்றிய விளக்கத்தை, முடிவை, காண்பீர்கள், ஶுகதேவ கோஸ்வாமீ, "இதுவரை நான் கேள்விபட்டதை நான் விளக்கியிருக்கிறேன்." அவர் கூரவில்லை, "நான் இதுவரை பார்த்தது." இதுதான் தேவைப்படுகிறது. (இடைவேளை)...அதாவது நாம் படைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
மேலும் மற்றவர்களும், கிறிஸ்துவர்களைப் போல், அவர்களும் பகவான் படைத்தார் என்று நம்புகிறார்கள். ஆனால் பகவான் படைப்பதை யார் பார்த்திருக்கிறார்கள்? யார் பார்த்திருக்கிறார்கள்? சும்மா பகவானிடமிருந்து கேட்டு கொள்ளுங்கள், "நான் படைத்துவிட்டேன்." அவ்வளவுதான். ஆனால் நீங்கள் சவால் இட்டால், "நீங்கள் படைத்துவிட்டதை நான் பார்க்கவில்லை; உங்களையும் நான் பார்த்ததில்லை," பிறகு நீங்கள் எவ்வாறு நம்புவீர்கள்? பகவான் கூறுகிறார், "நான் படைத்துவிட்டேன்," எனவே தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். எனவே மீண்டும் பார்ப்பதால் என்ன பலன, கண்காணிப்பகம்? நாம் பகவான் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம், ஆனால் அவர் வார்த்தைகளை நம்பாதீர்கள். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது." |
| 750704 - காலை உலா - சிக்காகோ |