| "மனித நாகரீகம் நான்காம் தர மனிதனை முதல் தரத்திற்கு உயர்துவதற்காக ஆனதாக இருக்க வேண்டும். அதுதான் மனித நாகரீகம். ஆனால் யார் முதல் தர-மனிதன் என்ற யோசனையே இல்லை. அனைவரும் குடிகாரர்கள், அனைவரும் தவறான பாலியல் வேட்டைக்காரர்கள், மேலும் அனைவரும் சூதாடிகள் மற்றும் அனைவரும் மாமிசம் உண்ணுபவர்கள். முதல் தர மனிதன் எங்கிருக்கிறான்? அங்கே முதல் தர மனிதன் இல்லை. அனைவரும் நான்காம் தர மனிதர்கள். மேலும் அவர்கள் வெறுமனே எவ்வாறு பல பெரிய வானளாவிய கட்டிடம், மற்றும் ஒவ்வொறு வருடமும், புதுமாதிரியான கார்களை எவ்வாறு உற்பத்தி செய்வது என்று கற்பிக்கப்படுகிறார்கள். அது நாகரீகமா? அது நாகரீகமல்ல. நீங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கலாம். எனவே தொழில்நுட்பம் என்றால் தொழில்நுட்ப வல்லுநர். ஒருவேளை ஒருவனுக்கு மின்சாரத்தில் எவ்வாறு வேலை செய்வது என்று தெரிகிறது, பல விஷயங்கள் தெரிகிறது. அவன் ஒரு கற்றறிந்த மனிதன் என்று அர்த்தமா? இல்லை. கற்றறிந்த, முதல் தர மனிதன், அது பகவத் கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது: ஶமோ த³ம꞉ ஸத்யம்ʼ ஶுசிஸ் திதிக்ஷா ஆர்ஜவம்ʼ, ஜ்ஞானம் விஜ்ஞானம் ஆஸ்திக்யம் ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (BG 18.42). இவர்கள்தான் முதல் தரமானவர்கள். அங்கே எதுவும் குறிப்பிடப்படவில்லை அதாவது 'எலக்ட்ரீஷியன்' அல்லது ஒரு 'மோட்டார் மெக்கானிக்' மேலும் ஒரு... (சிரிப்பொலி) எனவே நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள். ஆகையினால் நீங்கள் இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ளுகிறீர்கள், அந்த 'குற்றங்கள், மேலும், ஏன் மற்றும் என்ன செய்வது'."
|