TA/750703 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தன் (3): நான் வியக்கிறேன், ஆன்மீக ஆன்மா, ஆன்மீக உலகில் நித்தியமாக விடுதலை பெற்றால், அவன் எவ்வாறு திரும்ப முடியும்? ஆசையால்?

பிரபுபாதர்: ஆம். அவன் ஆசைப்பட்டால், அவன் மீண்டும் வரலாம். அந்த விருப்பம் அங்கே எப்பொழுதும் இருக்கிறது. நான் இந்தியாவில் இருந்தது போல்; நான் இங்கு வந்தேன். மேலும் நான் விரும்பினால், நான் வராமல் இருக்கலாம். அது என் விருப்பம்.

அம்பரீஷ: நாம் ஆன்மீக வானத்திற்கு போனபின், நாம் எப்பொழுதும் இங்கே கீழே எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்று நினைவில் கொள்வோமா? எப்பொழுதும் பௌதிக உலகம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்று நாம் நினைவில் கொள்ள முடியுமா?

பிரபுபாதர்: அது பயங்கரமானது.

அம்பரீஷ: ஆம், நாம் அதை நினைவில் கொள்ள முடியும்.

பிரபுபாதர்: அது புத்திசாலித்தனம். ஒருவர் இந்த உலகம் ஒரு து꞉காலயம் அஶாஶ்வதம் (BG 8.15), துன்பம் நிறைந்த இடம், என்று நினைத்தால், பிறகு நாம் செல்லலாம். நாம் அதை, "ஓ, அது ஒரு அழகான இடம்," என்று நாம் நினைக்கும்வரை, நாம் இங்கேயே இருக்க வேண்டும். கிருஷ்ணர் மிகவும் கருணை மிக்கவர், "சரி, இந்த அழகான இடத்திலேயே இருங்கள்."

ப்ரஹ்மானந்த: நீங்கள் நேற்று பகவான் இந்திராவைப் பற்றி உதாரணம் கொடுத்தீர்கள். அவர் இங்கு பன்றியாக பிறந்தபோது, பிறகு அவர் இதைவிட்டு செல்ல விரும்பவில்லை. இது நன்றாக இருக்கிறது என்று அவர் நினைத்தார்.

பிரபுபாதர்: ஆம், அவர், இது நல்ல இடம் என்றும் நினைத்தார்."

750703 - காலை உலா - டென்வர்