TA/750702b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கர்மாண தைவ-நேத்ரேண (SB 3.31.1): உங்கள் கர்மாவால், நீங்கள் நிலைமையை உருவாக்குகிறீர்கள். ஒரு கைதியை போல, அவன் ஒரு நிலைமையை உருவாக்கி இருக்கிறான். அவன் சிறைச்சாலையை விட்டு வெளியே இனிமேல் வாழமுடியாது. "இங்கே வா." அவன் தானாக உள்ளே சென்றுவிடுவான். இயற்கை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அவர்களுக்கு தெரியாது. அது தெளிவாக கூறப்பட்டுள்ளது ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி (BG 3.27). "இயற்கை வேலை செய்கிறது, மேலும் அந்த வேலை செய்கிறது," மயாத்யக்ஷேண, "என் கண்காணிப்பின் கீழ்." அனைத்தும் அங்குள்ளது. மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ-சராசரம் (BG 9.10). ஜகத்: அது மாறிக் கொண்டிருக்கிறது, எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கிறது. அது எவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறது? பகவானின் திசைக்கு ஏற்ப. மயாத்யக்ஷேண."
750702 - காலை உலா - டென்வர்