TA/750702 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் இணைப்பு மிகவும் வலுவானது, அதாவது து꞉காலயமாக இருந்தாலும்... எவ்வாறென்றால் சில பன்றிகளைப் போல், அவை அசுத்தமான இடத்தில் வாழ்ந்து மேலும் மலத்தை உண்ணுகிறது. மற்றும் நீங்கள் இவ்வாறு சொன்னால் அதாவது 'நான் உங்களை வேறு இடத்திற்கு எடுத்து செல்கிறேன், ஒரு நல்ல இடம்,' பிறகு அவர்கள் அங்கே போகமாட்டார்கள். இது நடந்திருக்கிறது. இது பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது அதாவது ஒருமுறை சொர்க்கத்தின் அரசன், அவன் ஒரு பன்றியாக சபிக்கப்பட்டார். மேலும் அவர் பன்றி சமூகத்துடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார். மேலும் பகவான் ப்ரஹ்மா அவரை மீண்டும் அழைத்துச் செல்ல கூப்பிட வந்தபோது, அந்த 'திரு அத்தகையவர், உங்கள் தவறான நடத்தையால் நீங்கள் பன்றியாக ஆனீர்கள். இப்போது மீண்டும் சொர்க்கத்திற்கு வாருங்கள்,' ஆனால் அவர் மறுத்தார், 'இல்லை எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. என்னால் செல்ல முடியாது'. நீங்கள் பாருங்கள்? இதுதான் பௌதிக... இதை மாயா, மாயை என்று அழைக்கின்றோம். நீங்கள் மிகவும் அருவருப்பான வாழ்க்கை நிலையில் இருந்தாலும், நம் உணர்வு, 'இப்போது நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்'. எனவே அதுதான் நம் நிலை. நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்ல விரும்பவில்லை."

750702 - சொற்பொழிவு SB 06.01.19 - டென்வர்