TA/750701 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தி என்றால் சுத்திகரிப்பு செயல்முறை. நாம் தூய்மையற்றவர்கள். நாம் தூய்மையற்றவர்களாக இருப்பதால், ஆகையினால் நாம் பல இன்னல்களை, வாழ்க்கையின் பல பரிதாபகரமான நிலையை எதிர்கொள்கிறோம். இல்லையெனில் நாம் ஆன்மீக ஆன்மா, ஆனந்தமயோ (அ)ப்யாஸாத் (வேதாந்த-ஸூத்ர 1.1.12). நம் நிலை ஆனந்தமய. ஆனந்தமய, வேதாந்த-ஸூத்ர சொல்கிறது, ஆனந்தமய. "இயற்கையில், ஆன்மீக ஆன்மா ஆனந்தமய, எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்தது." நீங்கள் கிருஷ்ணரை பாருங்கள். கிருஷ்ணர் மகிழ்ச்சி நிறைந்தவர். நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரின் படத்தை பாருங்கள், ஒன்று அவர் மாடு மேய்கும் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் அல்லது அவர் சில அசூரர்களை கொன்றுக் கொண்டிருப்பார், அவர் சிரித்துக் கொண்டு, மிகவும் விளையாட்டுத்தனமாக கொன்று கொண்டிருப்பார். மேலும் கோபிகளுடனும் மற்றும் ராதாராணியுடனும் என்னவென்று சொல்வது? அவர் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (Bs. 5.1), ஆனபடியால், எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் மேலும் பேரின்பம் நிறைந்தவராகவும் இருப்பார். மேலும் நாமும் கிருஷ்ணரின் அங்க உறுப்புகள். ஆகையினால் நம் நிலையும் ஒன்றே, ஒருவேளை சிறிய அளவில். நிலை ஒன்றே, ஆனந்தமயோ (அ)ப்யாஸாத் ( Vedānta-sūtra 1.1.12). ஆனந்தமய."

750701 - சொற்பொழிவு SB 06.01.18 - டென்வர்