TA/750630 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஸாதவ꞉ என்றால் புனிதமான. புனிதமான பண்புகள் யாவை? அதுவும் குறிப்பிடப்படுகிறது:
திதிக்ஷவ꞉ காருணிகா꞉
ஸுஹ்ருʼத꞉ ஸர்வ-பூதானாம்
அஜாத-ஶத்ரவ꞉ ஶாந்தா꞉
ஸாதவ꞉ ஸாது-பூஷணா꞉
(SB 3.25.21)

இவைதான் ஒரு ஸாதுவின் புனிதமான பண்புகள்—உடைகள் ஒரு ஸந்ந்யாஸீ போல் மேலும் மூன்று டஸன் பெண்களுடன் இருப்பது போல் இருக்கும் ஸாதுவல்ல. இல்லை. ஸாதவ꞉, அவர்களுடைய வேலை போதிப்பதாகும். கிருஷ்ணா கூறுகிறார், அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனன்ய-பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய꞉... (BG 9.30) அவர் தான் ஸாது, கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர். அபி சேத் ஸுதுராசார꞉. இப்படிப்பட்டவர்கள், நீங்கள் சில குற்றம் கண்டுபிடித்தால் கூட ... ஏனென்றால் அனைவரும் உடனடியாக குற்றமற்றவர்களாக முடியாது. கெட்ட பழக்கங்களினால், அவர்கள் சில நேரங்களில் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவன் கிருஷ்ண உணர்வில் கண்டிப்பாக இருந்தால்—அவன் விலகாமல் இருந்தால், கிருஷ்ணரை மறக்காமல் இருந்தால்—பிறகு அவன் ஸாதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவான். கிருஷ்ணர் கூறுகிறார். அது, அந்த தகுதிகளுக்கு மட்டும். பஜதே மாம் அனன்ய-பாக். அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தகுதிகள்."

750630 - சொற்பொழிவு SB 06.01.17 - டென்வர்