| "நாம் பணக்காரர் மகன், கிருஷ்ணரின் மகன். நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? அது தான் இயற்கை. ஒரு பணக்காரரின் மகன் வேலை செய்யமாட்டான். அவன் அனுபவிப்பான். நாம் நடனம் ஆடிக்கொண்டு நல்ல பிரசாதம் எடுத்துக் கொள்கிறோம். நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? நீங்கள் என்ன நினைக்கிறீகள்? ஏழை மனிதன் வேலை செய்வான். பணக்காரன், அவர்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? அவன் அனுபவிப்பான். கிருஷ்ணர் கூறுகிறார், போக்தாரம்ʼ யஜ்ஞ-தபஸாம்ʼ ஸர்வ-லோக-மஹேஶ்வரம் (BG 5.29). அவர் அனைத்து கிரகங்களின் உரிமையாளர், மேலும் நாம் கிருஷ்ணரின் வேலைக்காரர்கள், ஒரு பணக்காரரின் வேலைக்காரன். நான் ஏன் கடினமாக வேலை செய்ய வேண்டும்? கழுதை கடினமாக வேலை செய்யும், மனிதர்கள் அல்ல. மேலும் அது ர்ஸபாதேவின் அறிவுரை. நாயம்ʼ தே³ஹோ தே³ஹ-பாஜாம்ʼ ந்ருʼலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம்ʼ யே (SB 5.5.1). இந்த மனித வாழ்க்கை வெறுமனே உணவுக்காகவும் மேலும் இனச்சேர்க்கைக்காக கடினமாக உழைப்பதற்காக ஆனதல்ல. அது பன்றிகளின் வேலை. பன்றிகள் அவ்வாறு செய்கிறது. அவை இரவு பகலாக கொஞ்சம் மலம் கிடைக்க வேலை செய்கின்றன, மேலும் கொஞ்சம் வலிமை கிடைத்ததும் பாகுபாடு இல்லாமல் இனச்சேர்க்கையில் ஈடுபடும்—அம்மா, சகோதரி, யாரேனும். அது வாழ்க்கையா?"
|