TA/750629b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே நாம் ஒரு ஆன்மீக குருவை, கண்டிப்பாக நான்கு சங்கிலித் தொடர் சீடர் பரம்பரையில் இருந்து வருபவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு நாம் வெற்றி பெறுபவர் ஆவோம்.
நாமொரு குரு என்று அழைக்கப்படுகிறவரை ஏற்றுக் கொண்டால் பிறகு அது சாத்தியப்படாது. நாம் சங்கிலித் தொடர் சீடர் பரம்பரையில் இருப்பவரைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகையினால் அது இங்கு பரிந்துரைக்கப்படுகிறது, தத்-புருஷ-நிஷேவயா: நாம் அவருக்கு உண்மையாக மேலும் நேர்மையாக தொண்டு செய்ய வேண்டும். பிறகு நம் நோக்கம் பரிமாறப்படும். மேலும் நீங்கள் இந்த வழியில் செயல் புரிந்தால், வாழ்க்கையை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தால் மேலும் எப்பொழுதும் கிருஷ்ணர் சேவையில் தத்-புருஷரின் வழிகாட்டுதலில் ஈடுபட்டால்—அப்படியென்றால் ஒருவருக்கு கிருஷ்ணர் பக்தியை பொதிப்பதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை—பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும். நாம் அனைத்து பாவச் செயல்களில் இருந்தும் விடுதலை பெறுவோம்." |
| 750629 - சொற்பொழிவு SB 06.01.16 - டென்வர் |