TA/750629 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கடினமாக வேலை செய்வது, உண்பதற்கு, தூங்குவதற்கு, இனச்சேர்க்கைக்கு, மேலும் தற்காத்துக் கொள்வதற்கு, இது பூனை, நாய், மேலும் பன்றி முதலியவற்றாலும் செய்யப்படுகிறது. மனித வாழ்க்கை பன்றிகளும் நாய்களும் செய்ய முடியாத கூடுதலான முயற்சிகளுக்காக ஆனது. அதுதான் தேவைபடுகிறது. அது என்ன? தபஸ்ய, தபோ திவ்யம்ʼ புத்ரகா யேன ஸத்த்வம்ʼ ஶுத்த்யேத் ஸத்ய (SB 5.5.1).
மனித வாழ்க்கை ஒரு வகையான நோயிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆனது, அது பிறப்பு, இறப்பு, முதுமை, மற்றும் நோய். இதுதான் மனித வாழ்க்கையின் வேலை. ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா (SB 1.2.10). நாம் இதை பூரண அதிகாரம் பெற்ற, கிருஷ்ணரிடமிருந்து கேட்கிறோம், மேலும் நாம், நாம் தியானம் செய்து, நாம் நிதானமாக சிந்தித்தால், நமக்கு புரியும் அதாவது நாம் ஒவ்வொறுவரும் நித்தியமானவர்கள் என்று. பிறகு நான் ஏன் இறக்கிறேன்? இதுதான் கேள்வியாக இருக்க வேண்டும். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா." |
| 750629 - சொற்பொழிவு SB 01.02.06 - டென்வர் |