| "அவர்களுக்கு புரியவில்லை அதாவது இந்த பௌதிக கட்டுண்ட வாழ்க்கை எப்பொழுதும் பரிதாபகரமானது என்று. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள், 'அது மிக அருமையானது'. மிருகங்கள், மிருகங்கள்...எவ்வாறு என்றால் மிருகபலி கூடத்தில், கால்நடை கிடங்கில், அங்கே பல மிருகங்கள் இருக்கின்றன, மேலும் அவை படுகொலை செய்யப்பட போகிறது. அனைவருக்கும் தெரியும். அந்த மிருகங்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களுடை மிருக தரத்தால் அவைகளுக்கு எதுவும் செய்ய முடியாது. அதேபோல், நாமும் பௌதிக உலகம் என்னும் மிருகபலி கூடதில் போடப்பட்டிருக்கிறோம். அது ம்ருʼத்யு-லோக என்று அழைக்கப்படுகிறது. அனைவருக்கும் தெரியும் அவன் பலியிடப்படுவான் என்று. இன்றோ நாளையோ அல்லது ஐம்பது வருடங்கள் கழித்து, அல்லது நூறு வருடங்கள் கழித்து, அவன் பலியிடப்படுவான் என்று அனைவருக்கும் தெரியும். அவன் இறப்பான், சாவு என்றால் படுகொலை செய்யப்படுவான். யாருக்கும் சாக விருப்பம் இல்லை. அந்த மிருகங்களுக்கும் சாக விருப்பம் இல்லை, ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக கொல்லப்படிகின்றன. இதுதான் படுகொலை என்று அழைக்கப்படுகிறது."
|