TA/750627d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
27/3/26

"எனவே எங்கள் செயல்முறை மிகவும் எளிமையானது, அதாவது நாங்கள் எங்கள் வாழ்க்கையை வைஷ்ணவ சேவைக்கு அர்ப்பணிக்கிறோம், மேலும் அவருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப, ஶ்ரவணம்ʼ கீர்தனம், கேட்பதும் மற்றும் விஷ்ணு, க்ருʼஷ்ண, திருநாமத்தை உச்சாடனம் செய்கிறோம், மேலும் பாவச் செயல்களை தவிர்க்கிறோம். பிறகு வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறது. அது மிக கடினமாக இல்லை. நாங்கள் மிகுந்த கற்றறிந்த அறிஞராக, அல்லது மிகுந்த செல்வந்தராக அல்லது உயர்ந்த குடும்பத்தில் பிறக்க வேண்டியதில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் அருளப்பட்டாள், ஜன்ம ஐஶ்வர்ய ஶ்ருத ஶ்ரீ—இப்படியென்றால், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பது அல்லது பெரிய தேசத்தில், செழுமையாக, செல்வந்தராக, மேலும் மிகவும் உயர்ந்த கல்வி அல்லது மிகவும் அழகாக—இந்த விஷயங்கள் மிகவும் நல்ல பௌதிக உடைமைகள். நமக்கு அவை இல்லை என்றாலும், அங்கே தடைகள் எதுவும் இல்லை."

750627 - Arrival - டென்வர்