| "இந்த பௌதிக இயற்கை என்னும் அலைகளால் அனைவரும் அடித்துச் செல்லப்படுகிறார்கள்: "உண்ணுதல், மது அருந்துதல், மகிழ்ச்சியாக இருப்பது மேலும் அனுபவிப்பது." ஆனால் அது ஸித்தி அல்ல. அது பக்குவமற்றது. நீங்கள் இந்த பௌதிக தேவைகள் என்னும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டால், பிறகு அது ஸித்தி அல்ல. ஒருவர் ஸித்தவாக வேண்டும். ஸித்த என்றால் ஒருவர் "நான் யார் மேலும் என் கடமை என்ன?" என்று புரிந்துக் கொண்டவர். அதுதான் ஸித்த, குற்றமற்ற. அதுதான் முற்றுபெற்ற நிலையின் ஆரம்பம். எனவே மனுஷ்யாணாம்ʼ ஸஹஸ்ரேஷு கஶ்சித் யததி ஸித்ததே (BG 7.3). அந்த ஸித்த, குற்றமற்ற வாழ்க்கையும், இதுவும் அனைவருக்கும் ஏற்றதல்ல. மில்லியனில் யாரோ சிலருக்கு. கிருஷ்ணர் கூறுகிறார், யததாம் அபி ஸித்தானாம்: "ஸித்தாவாக இருப்பவர்கள், குற்றமற்ற நிறைவை அடைந்தவர்கள், அவர்கள் என்னை புரிந்துக் கொள்ள முயற்சி செய்தால், ஒருவேளை ஒன்றோ அல்லது இரண்டு பேரோ புரிந்துக் கொள்வார்கள்."
|