TA/750626b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் தொண்டு செய்பவர்களாகிறோம், ஆனால் எந்த வகையிலும், அதாவது "வருகிறவர் யாராயினும், நாம் தர்மம் கொடுக்கலாமா"? இல்லை. அது சாத்தியமில்லை. ஆகையினால் பகவானின் வரையறை பராஶர முனியால் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்ன்?
இது வரையறை, அது என்ன? ஐஶ்வர்ய என்றால் சொத்து, செல்வங்கள். எல்லோருக்கும் செல்வங்கள் இருக்கின்றன, கொஞ்சம் பணம், வீட்டில் அல்லது வங்கியில். எனவே உங்களிடம் இரண்டு மில்லியன் டாலர்; என்னிடம் பத்து டாலர் இருக்கலாம்; உன்னிடம் நூறு டாலர் இருக்கலாம். எல்லோரிடமும் கொஞ்சம் பணம் இருக்கும். அது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருவராலும் இவ்வாறு சொல்ல முடியாது அதாவது " என்னிடம் அனைத்து வகை செல்வங்களும் இருக்கிறது" அது சாத்தியமில்லை. யாரேனும் இவ்வாறு சொன்னால் "என்னிடம் அனைத்து வகை செல்வங்களும் இருக்கிறது," அவன் பகவான் ஆவான். அது கிருஷ்ணரால் பேசப்பட்டது. ஒருவரும், இந்த உலகின் சரித்திரத்தில் அவ்வாறு சொல்லவில்லை. கிருஷ்ணர் கூறுகிறார், போக்தாரம்ʼ யஜ்ஞ-தபஸாம்ʼ ஸர்வ-லோக-மஹேஶ்வரம் (BG 5.29) "நானே எல்லாவற்றையும் அனுபவிப்பவன், மேலும் நானே எல்லா பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்." யாரால் அதை சொல்ல முடியும்? அவரே பகவான்." |
| 750626 - சொற்பொழிவு SB 06.01.13-14 - லாஸ் ஏஞ்சல்ஸ் |