TA/750626 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபதார்: எனக்கு உதவி செய்ய நான் பல ஜிபிசியை நியமித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில், அனைவரையும் பார்ப்பது சாத்தியமில்லை. இது அவ்வாறல்ல...

பக்தன் (1): ஆனால் இவை அதே கேள்விகள், அவர்களே உங்களிடம் கேட்டிருக்கிறார்கள்.

ரேவதீநந்தன: இந்த நிலையில் இவ்வாறு கேள்வி கேட்கும் வேறு எவரையும் நான் சந்தித்ததில்லை. என்னால் அவர்களுடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. நான் உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டேன்.

பிரபுபதார்: என்னால் முடியாது. உங்களால் முடியவில்லை என்றால், என்னாலும் முடியாது. ஏனென்றால் நீங்கள் என்னால் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களால் முடியவில்லை என்றால், பிறகு அது...

பக்தன் (2): நாங்களும் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

ரேவதீநந்தன: நான் உங்கள் புத்தகத்தை படித்திருக்கிறேன், மேலும் உங்கள் விரிவுரையும் கேட்டிருக்கிறேன். மேலும் அவர்கள் பல விஷயங்களை கேட்கிறார்கள், எனக்கு ... அவர்களுக்கு பதில் கொடுக்க எனக்கு திறன்னில்லை. ஆனால் உங்களுக்கு அந்த திறன் கணடிப்பாக இருக்க வேண்டும், ஏனென்றால் உங்களுக்கு கிருஷ்ணரை தெரியும். ஆகையினால் அவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்புகிறார்கள்.

பக்தன் (1): எனவே அதுதான்...

பிரபுபதார்: இதுவரை என்னால் அவ்வளவாக பதில் அளிக்க முடியவில்லை. நான் என் தவறை ஏற்றுக் கொள்கிறேன்.

பக்தன் (1): ஓ, பிறகு அது...

பிரபுபதார்: என்னால் பதில் அளிக்க முடியாது.

பக்தன் (1): எனக்கு புரிகிறது. சரி? ஆனால் அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள், உங்களைப் பற்றிய பொதுவான கருத்து யாதெனில், ஏனென்றால் உங்களுக்கு கிருஷ்ணரை தெரியும்...

பிரபுபதார்: உங்களால் முடியும்... நீங்கள்...

பக்தன் (1): (குறுக்கீடு) மன்னிக்கவும். ஏனென்றால் உங்களுக்கு கிருஷ்ணரை தெரியும், ஆகையினால் ஜட உலகைப் பற்றி உங்களுக்கு அனைத்தும் தெரியும் மேலும் உங்களால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க இயலும்.

பிரபுபதார்: எனவே எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் என் புத்தகத்தில் விளக்கியுள்ளேன். அதையும் தாண்டி, எனக்கு அறிவு இல்லை."

750626 - உரையாடல் A - லாஸ் ஏஞ்சல்ஸ்