| "ஒரு வைஷ்ணவ தன் சொந்த நன்மைகளுக்கு மட்டும் ஆர்வம் காட்டமாட்டான். அவனுடைய சொந்த நன்மைகள் அவன் கிருஷ்ணர் கமலப் பாதங்களில் தஞ்சம் அடைந்த உடனே ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது. அவனுக்கு வேறு எதுமேலும் ஆசை இல்லை. கிருஷ்ணர் பாதுகாப்பில் அனைத்தும் முடிந்துவிட்டது. கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த꞉ ப்ரணஶ். . . (BG 9.31). ஆனால் அவர்கள் மனித சமூகத்தில் கிருஷ்ணர் சார்பாக வேலை செய்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் சந்தோஷமாக, அமைதியாக, மேலும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். அதுதான் வைஷ்ணவரின் கடமை. இல்லையெனில் வைஷ்ணவர்களுக்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை. அவனுக்கு உதவி செய்ய, எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்று கிருஷ்ணருக்கு தெரியும். எனவே அவனுக்கு கவலை இல்லை. அவனுடைய ஒரே கவலை யாதெனில், ஶோசே ததோ விமுக-சேதஸ மாயா-ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான் (SB 7.9.43)."
|