TA/750624 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜன்ம-ம்ருʼத்யு-ஜரா-வ்யாதி-து꞉க-தோஷானுதர்ஶனம் (BG 13.9). நாங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம்... இருப்பிற்கு எங்கள் போராட்டம் என்றால், நாங்கள் மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மகிழ்ச்சி வேண்டும். மேலும் கிருஷ்ணர் அதை வழங்குகிறார், "இதோ உன் துன்பம், அதாவது நீ இறக்க வேண்டும். இதற்கு நீ என்ன செய்தாய்? இதோ உன்னுடைய உண்மையான துன்பம்." நீ செல்வந்தர் ஆன அமெரிக்கனாக பிறந்திருக்கலாம் அல்லது மிகச் சிறந்த வானளாவிய கட்டிடம் வைத்திருக்கலாம் மற்றும் மிக அழகான வாகனங்கள் வைத்திருக்கலாம். ஆனால் நீ எந்த நேரத்திலும் உதைத்து வெளியேற்றப்படலாம், ஐயா. இதற்கு நீ என்ன செய்தாய், அதாவது இந்த இன்பத்திற்கு நீ காப்பீடு செய்யப்படுவாய் என்று? எங்கே அந்த காப்பீடு? இந்த விவகாரங்களில் நீ மிக சுறுசுறுப்பாக இருக்கிறாய், ஆனால் அதாவது இதை நீ அனுபவிக்க உனக்கு அனுமதி கொடுக்கும் உன் காப்பீடு எங்கே? இது தான் அறிவு. எந்த நேரத்திலும் நீ உதைத்து வெளியேற்றப்படுவாய். பிறகு உன் உழைப்பெல்லாம் கெட்டுப்போய்விடும்."
750624 - உரையாடல் - லாஸ் ஏஞ்சல்ஸ்