| "ஒரு பிராமணனின் தொழில் படன், பாடன், யஜன், யாஜன், தானம், பிரதிகிரகஹ் ஆகும். பிராமணன் என்றால் அவன் தானே கற்றுத் தேர்ந்தவன் என்று பொருள். அவன் ஒரு மிகச்சிறந்த பண்டிதன். அதுதான் பிராமணனின் முதல் தகுதி. மேலும், அவன் மற்றவர்களையும் பண்டிதர்களாக மாற்றுகிறான், தான் மட்டும் பண்டிதனாக இருப்பதில்லை. இது படன்-பாடன் எனப்படும். அடுத்து யஜன்-யாஜன். யஜன் என்றால் அவன் தெய்வத்தை (விக்ரகத்தை, மூலவர்) வழிபடுகிறான், மற்றவர்களுக்கும் எப்படி வழிபட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறான். தானம்-பிரதிகிரகஹ்: அவன் மற்றவர்களிடமிருந்து தானம் (பங்களிப்பு) பெறுகிறான், மற்றவர்களுக்குத் தானம் கொடுக்கிறான். பகலில் என்ன கிடைக்கிறதோ, அதை இரவில் கொடுத்துவிடுகிறான். எனவே, ஒரு பிராமணராவதற்கு இந்த ஆறு கொள்கைகள் உள்ளன."
|