| "ஒருவரும் ஆலோசனை கூறமாட்டார்கள். அவன் மகன் ஹிப்பியாவான்—அவன் பொறுத்துக் கொள்வான்: "இது நவீன நாகரீகம்." மேலும் அவன் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்தால், அவன் மகிழ்ச்சியற்றிருப்பான், ஏனென்றால் அவன் விரும்புவது அதாவது "என் மகனும் அதே விஷயத்தை செய்கிறான்." அதுதான் புன꞉ புனஶ் சர்வித-சர்வணானாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகம் அவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் மென்றதை மெல்லுகிறார்கள். நாங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தை கற்பிக்கின்றோம் அதாவது "இந்த பெளதிக வாழ்க்கையின் வழி நீங்கள் என்ன பெறுவீர்கள்? சும்மா கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முயலுங்கள், மேலும், பிறகு நீஙகள் மிகப்பெரிய நன்மைகள் பெறுவீர்கள்." த்யக்த்வா தே³ஹம்ʼ புனர் ஜன்ம நைதி (BG 4.9). நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளும், நாம் இந்த பெளதிக உடலை ஏற்றுக் கொணிடிருப்பதால் தான். அது அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு இந்த பெளதிக உடலை தவிர எதுவும் தெரியாது. யஸ்யாத்ம-புத்தி꞉ குனபே த்ரி-தாதுகே, ஸ ஏவ கோ-கர꞉ (SB 10.84.13)."
|