| "சத்வ குணம். எவ்வாறு என்றால் எல்லோரும் தத்துவ பேராசிரியராக முடியாது என்பது போல. அதற்கு குறிப்பிட்ட தகுதி இருக்க வேண்டும். ஆனால் அனைவரும் ஆகலாம். அனைவருக்கும் அந்த வாய்ப்பு உள்ளது. மேற்கொண்டு அவன் குறிப்பிட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும், பிறகு அவன் தத்துவ பேராசிரியராக பதவி ஏற்கலாம். அனைவருக்கும் அந்த வாய்ப்பு உள்ளது, உங்களுக்கு மட்டும் இருக்கிறது என்பதல்ல. யாரேனும் அந்த வாய்ப்பை அடையலாம். ஆனால் அதற்கு குறிப்பிட்ட தகுதி இல்லாமல் அதை அடைய முடியாது. அதேபோல், ஒருவர் சத்வ குண தகுதி பெற்றாலே தவிர இந்த விஷயங்கள் குழப்பமாகவே இருக்கும். ஆகையினால் நாம் நம் சீடர்களுக்கு உத்தரவிடுகிறோம், "சத்வ குண தளத்திற்கு வாருங்கள். இந்த முட்டாள்தனமான பழக்கங்களை விட்டுவிடுங்கள்." பிறகு அது சாத்தியமாகும்."
|