TA/750622b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பக்தர்கள், அவர்கள் கர்ம-காண்ட, ஜ்ஞான-காண்ட இவற்றில் இல்லை என்றால், அவன் தூய்மையான பக்தன் அல்ல. பக்தி என்றால் ஜ்ஞான-கர்மாத்ய்-அனாவ்ருʼதம் (CC Madhya 19.167). அங்கே பலனளிக்கும் நடவடிக்கைகளுக்கு அல்லது ஊகமான அறிவுக்கோ தொடர்பில்லை. பக்தர்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அன்யாபிலாஷிதா-ஶூன்யம்ʼ
ஜ்ஞான-கர்மாத்ய்-அனாவ்ருʼதம்
ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானு-
ஶீலனம்ʼ பக்திர் உத்தமா
(Brs. 1.1.11)

அதுதான் முதல்தர பக்தி, ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானு, சும்மா கிருஷ்ணரை திருப்திபடுத்துவது. அர்ஜுனரைப் போல். அவர் போர்புரிய விரும்பவில்லை அல்லது மற்ற கட்சியினரை கொல்ல விரும்பவில்லை. அது மிகவும் நல்லது. அவர் ஒரு வைஷ்ணவ. இயற்கையில் அவருக்கு சண்டை போடவோ அல்லது மற்றவர்களுடன் சண்டையை ஆரம்பிக்க அல்லது மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய அவருக்கு விருப்பமில்லை. வைஷ்ணவ ஒரு பர-து꞉க-து꞉கீ. அவருக்கு நன்றாக தெரியும் அதாவது "எனக்கு ஏதாவது தீங்கு விளைவிக்கும் செயல் நடந்தால், நான் மகிழ்ச்சியற்று இருப்பேன், எனவே நான் ஏன் மற்றவர்களுக்கு அதையே செய்ய வேண்டும்?"

750622 - சொற்பொழிவு SB 06.01.09 - லாஸ் ஏஞ்சல்ஸ்