TA/750622 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் முறை மிகவும் எளிதானது. நாம் அனைவருக்கும் சவாலாக இருக்கிறோம். எவ்வாறு என்றால் அங்கே பல அறிவியல் சீடர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நான் அறிவியல் மனிதன் அல்ல. நான் அறிவியல் படித்ததே இல்லை. ஆனால் விஞ்ஞானிகள், அவர்கள் என் சீடர்களாகிறார்கள். ஜட ரீதியாக பார்த்தால், எனக்கு அறிவியல் கல்வி இல்லை. ஆனால் ஏன் விஞ்ஞானி என் சீடனாகிறான்? அவன் முட்டாளாகிறானா? அவன் முனைவர் பட்டம் பெற்றபின், அவன் முட்டாளாகிறான், எனவே என்னை அவன் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறான்? ஆகையினால் வேத நிபந்தனை சரியானதே, அது இவ்வாறு கூறும்போது, யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏவம்ʼ விஜ்ஞாதம் பவந்தி ((Muṇḍaka Upaniṣad 1.3): "உங்களுக்கு கிருஷ்ணரை மிகச்சிறப்பாக தெரிந்திருந்தால், பிறகு உங்களுக்கு அனைத்தும் நன்றாக தெரியும்." அதுதான் வேத நிபந்தனை. எனவே நீங்கள் கிருஷ்ணரை நன்கு அறிந்திருந்தால் அல்லாது, உங்கள் அறிவு நிறைவற்றது."

750622 - உரையாடல் - லாஸ் ஏஞ்சல்ஸ்