| "கிருஷ்ணர் நமக்கு உதவி செய்கிறார். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (இடைவேளை) வ்யாஸதேவ இந்த நோக்கத்தொடு ஸ்ரீமத் பாகவதத்தை தொகுத்தார். அனர்த உபஸமம் ஸாக்ஷாத் பக்தி-யோகம் அதோக்ஷஜ (SB 1.7.6). இந்த லோகஸ்ய அஜானத꞉, மக்கள் அறியாமையால் துன்பம் அடைகிறார்கள், எனவே அவர்களுக்கு சரியான அறிவை கொடுப்பதர்காக, அவர் ஸ்ரீமத் பாகவதத்தை தொகுத்தார். (இடைவேளை) வ்யாஸதேவைவிட யார் சிறந்த கற்றறிந்தவராக இருக்கமுடியும்? ஆகையினால் அவர் வித்வான் என்று அறியப்பட்டார், சிறந்த பூரணமான கற்றறிந்தவர். அவர் இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எழுதிய நோக்கம், புலன் உணர்வில் மட்டும் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் இந்த போக்கிரிகளுக்காக. (இடைவேளை) வாழ்க்கை தபஸ்யாவிற்காகவானது. தபோ திவ்யம்ʼ புத்ரகா யேன ஶுத்த்யேத் (SB 5.5.1). அவர்களுக்கு தெரியவில்லை அதாவது நம் இருத்தலியல் நிலை தூய்மையற்றது என்று. "நான் இறக்க விரும்பவில்லை. அங்கே ஏன் இறப்பு என்று ஒன்று இருக்கிறது" இந்த கேள்வி எழுவதில்லை."
|